• Breaking News

    சிவகங்கை: வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டும் போலீஸ்..... கதறும் பெண்கள்....

     

    சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பருத்திகண்மாய் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு வீடுகளில் ஒன்றில் மகேஸ்வரியும் மற்றொரு வீட்டில் கணவர் சகோதரர் மனைவியும் குடியிருந்து வருகிறார்கள்.

     இந்நிலையில் வீட்டை மகன்களுக்கு தெரியாமல் மாமனார் வேறொரு நபருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது அதனைத் தொடர்ந்து வீட்டை தான் வாங்கி உள்ளதாக கூறி உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நான் வேறு மாறு நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என்று கூறி அன்புக்கரசி என்பவர் போலீசாரை வைத்து மிரட்டுவதாகவும் வீடு கட்டுவதற்கு தனது கணவர் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பியதுடன தான் அணிந்திருந்த நகைகளையும் அடகு வைத்து தான் அந்த வீட்டினை கட்டினோம் தற்போது திடீரென வேறு ஒருவர் வாங்கி விட்டதாக கூறி மிரட்டுவதால் மகேஸ்வரி கைக்குழந்தையுடன் செய்வதறியாது தவித்து வருகிறார்.

    No comments