எனது வருங்கால புருஷன் இப்படித்தான் இருக்கணும் - நடிகை ஜான்வி கபூர்
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாகி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய வருங்கால கணவர் பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, என்னுடைய வருங்கால கணவர் என்னுடைய கனவுகளை அவருடைய கனவுகளாக பார்ப்பதோடு என்னை எப்போதும் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டவுடன் அங்கிருந்த ஒருவர் வாழ்த்துக்கள் என்றார்.
அதற்கு நடிகை ஜான்வி ஏன் அப்படிப்பட்ட ஒருவர் கிடைப்பது கடினமா என்றார். அதற்கு ஏற்கனவே நீங்கள் தான் பார்த்து விட்டீர்களே என்று கூறினார். இதைக் கேட்டவுடன் ஜான்வி வெட்கப்பட்டு சிரித்தார். அதாவது நடிகை ஜான்வி கபூரும், ஷிகர் பகாரியாவும் காதலித்து வரும் நிலையில் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்கிறார்கள். மேலும் இந்த விஷயம் ஜான்வி கபூரின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூருக்கு தெரிந்த நிலையில் அவரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இதனால் காதல், கெரியர் எல்லாம் செட் ஆகிவிட்டதால் இனி திருமணம் செய்து கொள்ள வேண்டிதானே என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
No comments