தாம்பரம் மேற்கு பகுதி கழக அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்..... மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது
தாம்பரம் காந்தி சாலையில் தனியார் மண்டபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மேற்கு பகுதி கழக செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகளின் கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்திற்கு தாம்பரம் மேற்கு பகுதி கழக செயலாளர் கோபி நாதன் முன்னிலை வகித்தார்.கூட்டத்திற்கு தலைமை வகித்த செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் கலந்து கழக செயல்வீரர்கள் எவ்வாறு கட்சி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார்.கழக செயல்வீரர்கள் ஒவ்வொருவரும் கட்சி பணியை ஆர்வத்துடன் முன்னின்று செயலாற்ற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தின் முடிவில் அதிமுக வட்டச் செயலாளர் ஜெகஜீவன் ராம் ஏற்பாட்டில் தாம்பரம் மேற்கு பகுதிக்குப் பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், பகுதி கழக செயலாளர் கோபிநாதன் ஆகியோர் 7 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் கிழக்கு பகுதி செயலாளர் கூத்தன், மத்திய பகுதி செயலாளர் எல்லா செழியன் மற்றும் தாம்பரம் மேற்கு பகுதிகழக வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், செயல்வீரர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.இறுதியாக தாம்பரம் மத்திய பகுதி செயலாளார் எல்லார் செழியன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
No comments