• Breaking News

    முசிறியில் முன் விரோதத்தால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு..... தலைமறைவான குற்றவாளிகள் கைது....


    முசிறி ரத்னா நகரை சேர்ந்த ஞானசேகர் மகன் ராஜேஷ் (30) இவரது தம்பி சரவணன் (24 )புது கள்ளர் தெருவில் வசிக்கும் பிரியதர்ஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை ராஜேஷ் முன்னின்று நடத்தி, புது கள்ளத் தெருவில் வீடு பார்த்து அவர்களை குடியமர்த்தி வந்துள்ளார். இந்நிலையில் சரவணனை பார்க்க ராஜேஷ் சென்றபோது, அப்போது அங்கே இருந்த மருதை மகன்கள்  வேல்முருகன் (28 )செந்தில் (26) ஆகியோர் ராஜேஸை தலையில் வெட்டி பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளனர். காயம் பட்டவரை முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ராஜேஷ் சிகிச்சையில் இருந்த போது போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் போலீசார் வேல்முருகன் மற்றும் செந்தில் மீது வழக்கு பதிவு செய்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தலைமறைவாக இருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    No comments