• Breaking News

    பெண்ணை மடியில் வைத்து பைக் சாகசம் செய்த வாலிபர்..... அலேக்கா அமுக்கிய போலீஸார்....

     

    பெங்களூரின் பரபரப்பான சாலையில் ஒரு இளைஞர், தனது மடியில் இளம்பெண் ஒருவரை அமர வைத்து, இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.இதில் அந்த பெண் பைக்கை ஓட்டிய இளைஞரின் மடியில் அமர்ந்து கால்களை வெளியே நீட்டிக் கொண்டும், கைகளால் அவரது கழுத்துப் பகுதியைப் பிடித்துக் கொண்டு சவாரி செய்துள்ளார். இருவருமே ஹெல்மெட் அணியவில்லை.

    இந்த சம்பவத்தை அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி, பலரும் இந்த ஆபத்தான செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.இந்த சம்பவம் கடந்த 17ம் தேதி பெங்களூரு ஏர்போர்ட் சாலையில் நடந்துள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட செயலில் ஈடுபட்ட இளைஞர் மீது பெங்களூரு மாநகர காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வைரலான வீடியோவை கொண்டு, ஹெப்பால் போக்குவரத்து போலீஸார், சம்பந்தப்பட்ட வாகன எண்ணை வைத்து இந்த பாதக செயலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில் பெங்களூரு காவல் துறையினர் எக்ஸ் தளத்தில் அந்த வீடியோவை வெளியிட்டு அதனுடன் "திரில்லிங்கை விரும்புபவர்களே... சாலை சாகசங்களுக்கான மேடை அல்ல; நீங்கள் உள்பட அனைவரின் நலனுக்காக சாலையை பாதுகாப்பானதாக வைத்திருங்கள். பொறுப்புடன் பயணிப்பீர்!” என்ற வாசகங்களை குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments