கன்னிகைப்பேர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களை கௌரவப்படுத்தும் வகையில் பாராட்டு விழா நிகழ்ச்சி கன்னிகைப்பேர் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கன்னிகைப்பேர் ஊராட்சி, பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் பூபதி-புஷ்பவதி தம்பதியரின் மகள் கோபிகா பிளஸ் 2 பொது தேர்வில் 600-க்கு 543 மதிப்பெண் எடுத்து இப்பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.கன்னிகைப்பேர் சிஎஸ்ஐ மெயின் ரோட்டில் வசித்து வரும் எபினேஷன் ஸ்வர்ணலதா தம்பதியரின் மகன் அஸ்வந்த் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500-க்கு 482 மதிப்பெண்கள் எடுத்து இப்பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான்.இந்நிலையில், இந்த மாணவர்களை கௌரவப்படுத்தும் வகையில் பாராட்டு விழா நிகழ்ச்சி ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,வந்திருந்த அனைவரையும் ஊராட்சி செயலர் பொன்னரசு வரவேற்றார்.இதில்,ஊராட்சிமன்ற தலைவர் காயத்ரி உதயகுமார்,துணைத் தலைவர் மேனகா பிரேம்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அரசுப் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களை வாழ்த்தி பேசினர்.இதன் பின்னர், மாணவர்களுக்கு சால்வை,மெடல் அணிவித்து நினைவு பரிசு,இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்து வாழ்த்தி பேசினர். இந்நிகழ்ச்சியில்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிராமப் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments