இனி வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு லைசென்ஸ் கட்டாயம்...... அதிரடி உத்தரவு.....
சென்னை ஆயிரம் விளக்கு அருகே உள்ள பூங்காவில் 5 வயது சிறுமியை 2 ரேட்வீலர் நாய்கள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்ப்பதாக நாயின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சிறுமியை கடித்த நாய்களுக்கு உரிமையாளர் முறையான வளர்ப்பு லைசன்ஸ் பெறவில்லை என்றும் நாய் மற்றும் பூனை போன்ற பிராணிகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
No comments