• Breaking News

    மணல்மேடு அருகே வில்லியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மருந்து கடையை உடைத்து கொள்ளை


    மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்துள்ளது வில்லியநல்லூர் கிராமம்.இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது.அதன் அருகே மயிலாடுதுறை மூங்கில் தோட்டத்தில் வசிக்கும் சுந்தரமூர்த்தி மகன் விவேக் சங்கர் (வயது 32),மருத்து கடை கடந்த 4 - மாதங்களாக வைத்துள்ளார்.இவரது கடையின் கதவை நேற்று அதிகாலையில்,மர்ம நபர்கள் உடைத்து கடையில் இருந்த லேப் - டாப்,விலையுயர்ந்த செல்போன். ரூ 1500 ரொக்கம்,மற்றும் கடையில் இருந்த CCTV கேமரா ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்று உள்ளனர். இச்சம்பவம் அறிந்து வந்த கடை உரிமையாளர் விவேக் சங்கர் மணல்மேடு காவல் துறையில் புகார் அளித்ததின் பேரில்,காவல் துறையினர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்புனர்.

    செய்தியாளர் தாரிக்கனி

    No comments