• Breaking News

    தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

     

    தனுஷ்கோடிக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்கு சென்று சுற்றி பார்ப்பார்கள்.

    இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப்பயனிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயனிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தனுஷ்கோடி பகுதியில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகே, சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

    No comments