புத்த பூர்ணிமா விடுமுறை..... ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

 

மத்திய அரசு விடுமுறை தினமான 23.05.2024 அன்று புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளனர். நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவித்துள்ளனர்.மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை இயங்குகிறது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். புத்த பூர்ணிமா மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிற நாடுகளிலும் குறிப்பாக இலங்கை, சீனா, நேபாளம், இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் புத்த பூர்ணிமா தினத்தை கோலாகலத்துடன் சிறப்பாக மக்கள் கொண்டாடுகிறார்கள்.

 அதே போல் இந்தியாவிலும் புத்த பூர்ணிமாவுக்காக பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்தந்த மாநில அரசுகள் சார்பில் விழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இலங்கை, நேபாளம், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் புத்த பூர்ணிமா விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மே 23-ம் தேதி புத்த பூர்ணிமா கொண்டாடப்பட உள்ளது.மற்ற நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் புத்த பூர்ணிமா விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. 

இந்த விழாவை முன்னிட்டு மாநில அரசுகள் பலவும் பொது விடுமுறை அறிவித்துள்ளன. இந்தநிலையில் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புறநோயாளிகள் பிரிவு இயங்காது எனவும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments