• Breaking News

    'தாத்தா நல்லா இருக்கீங்களா' வில்லேஜ் குக்கிங் தாத்தாவிற்கு போன் போட்டு நலம் விசாரித்த ராகுல் காந்தி

     

    சமூக வலைதளமான யூடியூப்பில் மிகவும் பிரபலமான சேனமல் வில்லேஜ் குக்கிங் சேனல். இந்த சேனலில் முக்கியமானவர் தாத்தா பெரியதம்பி தான். சமையல் வீடியோக்களில் ’இன்னைக்கு ஒரு புடி’ என்ற வசனத்தின் மூலம் பிரபலமடைந்தார் தாத்தா பெரியதம்பி.புதுக்கோட்டை மாவட்ட சின்ன விரமங்கலம் என்ற கிராமத்தில் சாதாரணமாக தொடங்கிய இவர்களது பயணம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பலரையும் ஈர்த்தது. இவர்களுக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த அளவுக்கு இவர்களது வீடியோக்கள் பிரபலமானது.இவர்களது இந்த பயணம் மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது. குறிப்பாக, கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி வில்லேஜ் குக்கிங் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமைத்தார்.யூடியூபர்களுடன் இணைந்து ராகுல் காந்தி சாப்பிட்டது தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. இதன் பிறகு இவர்களின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் பயணித்தது. இந்த குழுவில் அட்டகாசமான சமையலால் பலரையும் ரசிக்க வைத்திருந்த தாத்தா பெரியதம்பிக்கு இதய நோய் காரணமாக அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பெற்று உடல் நிலை சரியான பிறகு வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தா பெரியதம்பி வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.தனது உடல்நிலை குறித்து பேசிய அவர், “அனைவருக்கும் வணக்கம். எனக்கு சில காலமாக உடல்நிலை சரியில்லை. உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். அப்போது, மெசேஜ் மூலமாகவும், கால் மூலமாகவும், நேரில் வந்தும் பலரும் எனக்கு ஆறுதல் கூறினீர்கள். அனைவருக்கு நன்றி.

    இதற்கிடையில், தம்பி ராகுல் காந்தியும் போன் செய்து நலம் விசாரித்தார். தாத்தா நல்லா இருக்கீங்களா.. உங்களுக்கு ஒன்றும் ஆகாது ..பூரண குணமடைந்துவிடுவீர்கள் என்று ஆறுதல் கூறினார். அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    நான் மருத்துவமனையில் இருந்தபோதும் மக்கள் பலரும் என்னை நினைத்து கண்ணீர்விட்டு இருக்கிறீர்கள். அதை நினைத்த நான் அழுதுவிட்டேன். நான் இறப்பதை நினைத்து அழுகவில்லை.

    இவ்வளவு மக்களையும் விட்டு இறக்கப்போவதை நினைத்து தான் அழுதேன். ஆனால், உங்கள் புண்ணியத்தால் நான் நலன் பெற்றுவிட்டேன்” என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    No comments