• Breaking News

    எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

     

    அ.தி.மு.க பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சேலத்தில் உள்ள தனது வீட்டில் 70 கிலோ கேக்கை வெட்டி எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

    No comments