மயிலாடுதுறை அருகே மது அருந்திய இருவர் மருத்துவமனையில் அனுமதி.....
மயிலாடுதுறை அருகே தென்னலக்குடி அரசு மதுபானக் கடையில் மது வாங்கி அருந்திய இருவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மது அருந்திய மணிகண்டன், சார்லஸ் ஆகிய இருவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில் ஜனவரி மாதமே காலாவதியான மதுபானம் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
No comments