தொட்டியம் சிவன் கோயிலில் தீர்த்தவாரி - பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா (படங்கள்)
தொட்டியம் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவில் பத்தாம் நாள் நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சியும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது.
கடந்த பத்து நாட்களாக வைகாசி விசாகப் பெருந்திருவிழா நடந்து வந்தது. இந்நிலையில் பத்தாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சுவாமிகளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனையும் மகா தீபாராதனையும் நடந்தது. பிறகு நடராஜர் தரிசனம் நடந்தது.
மாலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியில் விநாயகர் மூஷிக வாகனத்திலும் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை மயில் வாகனத்திலும் மயூர வாகனத்தில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் தனி அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி புறப்பாடு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
விழாவில் கோயில் நிர்வாக அதிகாரி கலைவாணி உபயதாரர் வரதராஜபுரம் சுப்பிரமணி ஐயர் மருத பிள்ளை கணக்கர் பாலன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments