பிரதமரின் தியானத்திற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - அண்ணாமலை
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று முதல் தன்னுடைய தியானத்தை தொடங்கியுள்ளார். அதன்படி ஒரே இடத்தில் அமர்ந்தவாறு 3 நாட்களுக்கு பிரதமர் மோடி தியானம் செய்ய இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நெருங்கி வரும் சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானத்தில் ஈடுபட்டுள்ளது அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயத்தில் பிரதமர் தியானம் செய்வது தேர்தல் விதிமுறை மீறல் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடியின் தியானத்திற்கும் பாஜக கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என பரபரப்பு தகவலை கூறியுள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி குமரி முனையில் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 1892 ஆம் ஆண்டு அதே இடத்தில் சுவாமி விவேகானந்தர் 3 நாட்கள் கடும் தவம் செய்தார். அதன் மூலம் பாரத அன்னையின் சிறப்பை உணர்ந்ததாக அவர் கூறினார். அதே இடத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது பிரதமர் மோடியின் தனிப்பட்ட நிகழ்வு தான். எனவே பாஜக சார்பில் நாங்கள் யாருமே அங்கு செல்லவில்லை. மேலும் பிரதமரின் தியானத்திற்கும் பாஜக கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.
No comments