• Breaking News

    நாய்கள் கடித்த சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி..... மருத்துவ செலவை ஏற்றது சென்னை மாநகராட்சி.....

     

    சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த ரகு என்பவரின் 5 வயது மகள் சுதக்ஷாவை நேற்று புகழேந்தி என்பவரின் இரு வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது‌. இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாய்கள் கடித்து குதறியதில் சிறுமிக்கு தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி நடைபெற இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி கொடுத்துள்ளார்.

    அவர் பேசியதாவது, இந்த விவகாரத்தில் புகழேந்தி, அவருடைய மனைவி தனலட்சுமி மற்றும் மகன் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு தடை செய்துள்ள 23 வகை நாய்களில் ராட்வீலர் வகை நாய்களும் அடங்கும். எந்த ஒரு உரிமையும் பெறாமல் ராட்வீலர் நாயை அவர்கள் வளர்த்து வந்துள்ளனர். இது தொடர்பாக நாய்களின் உரிமையாருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எந்த ஒரு வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் அதற்கு லைசன்ஸ் பெறுவதோடு கண்டிப்பாக அனைத்து வகையான தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டும். மேலும் சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட இருக்கிறது. இதனால் சிறுமியின் மருத்துவ செலவு மொத்தத்தையும் மாநகராட்சி நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

    No comments