பெரம்பலூர் அருகே சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
பெரம்பலூர் மாவட்டம் நெற்குணம் கிராமத்தில் மனவளக்கலை மன்றத்தின் சார்பில் இலவச யோகா பயிற்சிகள் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் இன்று சுற்றுபுற சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி தவ மையத்தின் பொறுப்பாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் டாக்டர் புவனேஸ்வரி கலந்து கொண்டு சுகாதாரத்தை குறித்து எடுத்துரைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் யோக பேராசிரியர்கள், பயிற்சியாளர்கள், கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.இறுதியில் கிராம மக்கள் அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
செய்தியாளர் எம்.முருகானந்தம்
No comments