• Breaking News

    சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் பல லட்சம் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மின்னும் கப்பல் போல் காட்சி அளிக்கும் பிரமாண்ட பூப்பல்லக்கு ஊர்வலம் (படங்கள்)

     

    சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் திருக்கோவில் வைகாசி விசாக பிரமோற்சவ பெருந்திருவிழா நிறைவு நாளில் பல லட்சம் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மின்னொளியில் மின்னும் கப்பல் போல் காட்சி அளிக்கும் பிரமாண்ட பூப்பல்லக்கு ஊர்வலம் நள்ளிரவில் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார்.

     சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் 800 ஆண்டுகள் பழமையான மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ  பெருந்திருவிழா கடந்த மே 12ஆம் தேதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் பெருந்திருவிழா விமர்சையாக துவங்கியது.

     இந்த வைகாசி திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஐந்தாம் நாள் திருக்கல்யாணம், ஆறாம் நாள் நள்ளிரவில் திகிலூட்டும் கழுவன் விரட்டும் திருவிழாவும், விழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாள் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேர் இழுக்கும் நிகழ்வும், தேர் நிலையை அடைந்தவுடன் தேரடி படியில் நேர்த்திக்கடன் வைத்த பக்தர்கள் மூன்று  லட்சம் தேங்காய் உடைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

     அதனை தொடர்ந்து நிறைவு நாளான பத்தாம் நாள் இன்று பூரண புஷ்கலா சமேத ஸ்ரீ சேவுகப்பெருமாள்  அய்யனார் பல லட்சம்  மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மின்னொளியில் மின்னும் கப்பல் போல் காட்சி அளிக்கும் பிரம்மாண்ட பூப்பல்லக்கில் நள்ளிரவில் எழுந்தருனார். அன்னை ஸ்ரீ சிங்கம்பிடாரி அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும், ஸ்ரீ விநாயகர் வெள்ளி மூஞ்சூர் வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதனை தொடர்ந்து நள்ளிரவில் பல லட்சம்  மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கப்பல் போல்  பிரமாண்டமாக காட்சி அளிக்கும் பூப்பல்லக்கில் எழுந்தருளிய பூரண புஷ்கலா சமேத ஸ்ரீசேவுகப்பெருமாள் அய்யனாரும்,அன்னை சிங்கம்பிடாரி அம்மனும், ஸ்ரீ விநாயகரும், மினனொளியில்  இரண்டு மாடுகள் பூட்டிய ரதத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி வானவேடிக்கையுடன் தேரோடும் நான்கு ரத  வீதியில் திருவீதி உலா வரும் அற்புத நிகழ்வு நடைபெற்றது. திருவீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனாரை தரிசனம் பெற்றுச் சென்றனர்.

    No comments