தென்காசி அருகே தோரணமலை முருகன் கோயிலில் பரத நாட்டியம் பயின்ற மாணவிகளின் அரங்கேற்ற விழா..... ஆர்வத்துடன் கண்டுகளித்த மாவட்ட ஆட்சியர்
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள நட்சத்திர கலாச்சார கலைகள் நாட்டிய குழு சார்பில் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவில் மண்டபத்தில் நாட்டியம் பயின்ற மாணவிகளின் நாட்டிய அரங்கேற்ற விழா நடந்தது.
விழாவில் பரத நாட்டிய மாணவிகளுக்கான சலங்கை பூஜை செய்யப்பட்டு பரத நாட்டிய குருவான டாக்டர் சுவேதா மாணவிகளுக்கு கால்களில் சலங்கைகளை அணிவித்து அரங்கேற்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பயிற்சி பெற்ற நாட்டிய மாணவிகளான லோக ஜெனினா, தர்ஷனா, ஹர்ஷித்தா, லெக்க்ஷனா , பூஷிகா, வெனிஷா, யுவதர்ஷினி ஆகியோரின் அரங்கேற்றமும், பின்னர் நடன மாணவிகள் மற்றும் நடன பயிற்சி குருவான டாக்டர் சுவேதாவின் பரத நாட்டியமும் நடந்தது.
விழாவில் 11 பாடல்களுக்கு மாணவிகள் சிவன் வேடம் அணிந்தும், பானைகள் மீது ஏறி அனைத்து வித பாவனைகளையும் காண்பித்து நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.
விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் கமல்கிஷோர் மற்றும் ஆவடி நாட்டிய கலா மந்தீர் நிறுவனர் டாக்டர். மீனாட்சி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டி பேசினார்கள்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்சியை மகிழ்சியுடன் கண்டு களித்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்
No comments