கோவிஷீல்டு தடுப்பூசி...... தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு......
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தது. இதனால் மக்கள் பலரும் அச்சத்துடன் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் எந்த பின்விளைவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று அமைச்சர் சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
No comments