திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் அருண் ஸ்டாலின் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரின்சி (27) என்ற மனைவியும் 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பிரின்சி ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே மில்லில் திவாகர் (24) என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதில் திவாகருக்கு திருமணம் ஆகி உமா பாரதி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். கடந்த 2 வருடங்களாக பிரின்சி மற்றும் திவாகர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் அடிக்கடி பிரின்சி தன்னுடைய கள்ளக்காதலனிடம் நகை மற்றும் பணம் போன்றவற்றை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் திவாகர் ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் சர்ப்ரைஸ் கிப்ட் தருவதாக கூறி பிரின்சியை பல்லடத்திற்கு வர சொல்லியுள்ளார். அங்கு இந்திரகுமார் என்பவர் தன்னுடைய ஆம்னி காரை கொண்டு வந்த நிலையில் திவாகரும் அவருடன் இருந்தார். அதன் பிறகு திவாகர் காருக்குள் ஏறிய பிரின்சியிடம் கண்களை மூடி சர்ப்ரைஸ் கிப்ட் தருகிறேன் என்று கூறியுள்ளார். அதன் பிறகு நைலான் கயிற்றால் அவரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் திவாகர் மற்றும் இந்திரகுமார் இருவரும் சடலத்தை புதைக்க திட்டமிட்டு அங்கிருந்து கிளம்பினார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் அவர்கள் மாட்டிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து பிரின்சியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திவாகர் மற்றும் இந்திரகுமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
0 Comments