வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆறுமுகநைனார் வீதி உலா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலம் ஆகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வயானை சம தே ஶ்ரீஆறுமுக பெறுமான் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. நான்கு ரத வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீ ஆறுமுக நைனாரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்
No comments