• Breaking News

    கற்கள் வீசித் தாக்குதல்..... தெறித்து ஓடிய பாஜக வேட்பாளர்.... (வீடியோ)

     

    மக்களவைத் தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் ஜார்கிராம் தொகுதியில் மோங்லபோட்டாவில் உள்ள வாக்குச்சாவடி எண் 200-க்கு பிரனாத் துடு சென்றபோது, அங்கு அவர்மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

    இச்சம்பவம் குறித்து பேசிய பிரனாத் துடு, "மொங்கலபொட்டாவில் பாஜக வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை என எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் என்ன பிரச்சினை என்று பார்க்க இந்த பகுதிக்கு வந்தோம். இங்கு சுமார் 200 பேர் எங்களை லத்தியால் தாக்கினர். கற்கள் மற்றும் சில ஆயுதங்கள் கொண்டு எங்களை தாக்கினார்கள். அங்கு மத்திய படைகள் இருந்திருக்கவில்லை என்றால் நாங்கள் கொல்லப்பட்டிருக்கலாம். உள்ளூர் போலீசாரிடமிருந்து எங்களுக்கு எந்த பாதுகாப்பும் கொடுக்கவில்லை.திடீரென்று, சாலைகளை மறித்த திரிணமூல் காங்கிரஸ் குண்டர்கள் என் கார் மீது செங்கற்களை வீசத் தொடங்கினர்.

    வீடியோ பார்க்க க்ளிக் செய்யவும்

     எனது பாதுகாப்புப் பணியாளர்கள் தலையிட முயன்றபோது, அவர்கள் காயமடைந்தனர். என்னுடன் வந்த இரண்டு சிஐஎஸ்எப் ஜவான்கள் தலையில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்" என்று டுடு கூறினார்.நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து பேசிய திரிணமூல் நிர்வாகிகள், “அமைதியான வாக்குப்பதிவு செயல்முறையை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. இப்பகுதிக்கு வந்த பாஜக வேட்பாளர் வாக்காளர்களை அச்சுறுத்தினார். இதனால் கிராம மக்கள் ஆத்திரமடைந்து போராட்டம் நடத்தினர்" என்று கூறினார்கள்.

    No comments