• Breaking News

    கன்னியாகுமரியில் கனமழை..... சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

     

    கன்னியாகுமரி பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று காலை கருமேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமாக காட்சி அளித்தது. கடல் சீற்றமாகவும் காணப்பட்டது.

    இருப்பினும் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக வழக்கம்போல் இன்று காலை 7.45 மணிக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறை வளாகத்தில் அமைந்து உள்ள டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டு டிக்கெட் விநியோகம் நடந்து கொண்டிருந்தது. ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி கொண்டிருந்தனர்.இதற்கிடையில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. 

    கடலும் சீற்றமாக காணப்பட்டது. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். இதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டனர்.அதுமட்டுமின்றி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டியபடகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    No comments