சார் பதிவாளர் வீட்டில் சாட்டையை சுழற்றிய லஞ்ச ஒழிப்புத்துறையினர்..... சிக்கியது பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள்......


 கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியைச் சேர்ந்தவர் தையல்நாயகி. இவர் விழுப்புரம் இணை சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். விழுப்புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தது. இந்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

சார்பதிவாளர் வீடு

அப்போது கணக்கில் வராத ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சார் பதிவாளர் தையல்நாயகி உட்பட அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர்கள் என 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நெய்வேலியில் உள்ள தையல்நாயகியின் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர்.காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சோதனையில், ஒரு கோடியே 26 லட்சம் மதிப்புள்ளான பிக்ஸட் டெபாசிட் பத்திரங்கள், தங்கப் பத்திரங்கள், 17 நில ஆவண பத்திரங்கள் ஆகியவை அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments