தேர்தலுக்கு பிறகு அதிமுக தலைமை மாறலாம்.....? அமைச்சர் ரகுபதி கிளப்பிய புதிய சர்ச்சை....
தேர்தலுக்குப் பிறகு செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுக இயங்கும் என செய்திகள் வருவதாக கூறி அமைச்சர் ரகுபதி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதிமுகவின் பிளவை உண்டாக்கும் வேலையை திமுக செய்யாது என்று கூறிய அவர், பாஜக தான் அதை செய்யும் எனவும் சாடினார். ஏற்கனவே செங்கோட்டையன் மற்றும் வேலுமணி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
No comments