வெகு விமர்சையாக நடைபெற்ற சிறுவாச்சூர் கோயில் தேரோட்டம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் மிகவும் புகழ்பெற்ற மதுரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. தற்போது சித்திரை மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.கற்பகம் கலந்து கொண்டு, வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி மற்றும் பெரம்பலூர்,சிறுவாச்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
No comments