• Breaking News

    தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் பொதுமக்களுக்கு குளிக்க அனுமதி.... மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை


     மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் இரவு பெய்த மழையால்  குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது - சுற்றலா பயணிகளின் பாதுகாப்பை கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது.  இன்று தண்ணீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் அருவிக்கரையில் அலைமோதும் மக்கள் கூட்டம்.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. தற்போது அண்டை மாநிலமான வில்  தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியிலும் குளு குளு காற்றுடன் சாரல் மழை பொழிந்து வருகிறது. மேலும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி புலியருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிற்றருவிகளில் நீர்வரத்து சீராக இருந்து வருவதால் சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறை கொண்டாடுகின்ற வகையில் அதிகளவு வருகை தந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். 

    இந்த நிலையில் நேற்று இரவு குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை அருவிகளில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன்  குளித்து வருகின்றனர். மேலும் கோடை விடுமுறை கொண்டாடுவதற்காக சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வருகை தந்து குளித்து வருவதால் அருவிக்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருவதாலும் குற்றாலம் மெயின் அருவியில் பெண்கள் கூட்டம் அதிகளவு காணப்படுவதால் பெண்களை மட்டும் வரிசையில் காத்திருந்து 25 பேர் 25 பேர் விதமாக குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பெண்கள் பகுதியில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 

    மேலும் குற்றால அறிவிக்கரைகளில் நீர்வரத்து சீராக இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதாலும் இப்பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்


    No comments