• Breaking News

    கும்மிடிப்பூண்டியில் தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடைமுறைகளை பின்பற்றவில்லை..... பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் குற்றச்சாட்டு


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் குப்பை சேகரிக்கும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட கடுமையான தீ விபத்தால் அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டதாக கூறி அந்த கிராமத்து மக்கள் போராட்டம் செய்வதற்காக தொழிற்சாலை முன்பு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதாவின் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் வந்திருந்தார். அவர் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை முழுவதுமாக சுற்றிப் பார்த்துவிட்டு பின்பு பாதிக்கப்பட்ட மக்கள் இடத்தில் இதுகுறித்து கேட்டறிந்தார் அதன் பின் உங்களுக்காக நான் தெருவில் இறங்கி போராட இருக்கிறேன் பிஜேபி அரசாங்கம் உங்களுக்காக பின் நிற்கும் என்றும் கூறினார்.

    மேலும் பத்திரிகையாளர்கள்  சந்திப்பில் பேசிய வினோஜ் தொழிற்சாலை சரியான முறையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை மேலும் தீ ஏற்பட்டால் அதை சரியான முறையில் அனைப்பதற்கான எந்தவித தடுப்பு நடவடிக்கும் தொழிற்சாலையில் இல்லை இதன் காரணமாக தீயை அனைப்பதற்கு தீயணைப்பு துறைக்கு 6 மணி நேரம் தேவைப்பட்டது. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடைமுறைகளை சரியான முறையில் தொழிற்சாலை கடைபிடிக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது என்று கூறியவர். பாரதிய ஜனதாவின் நோக்கம் தொழிற்சாலையை மூடுவது அல்ல மாறாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடைமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.

    செய்தியாளர் எம்.சுந்தர் கும்மிடிப்பூண்டி


    No comments