• Breaking News

    காடுவெட்டியில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா.... முசிறி சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு


    திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காடுவெட்டியில்  முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349 சதய விழாவை முன்னிட்டு நேற்று மாலை நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து இலவச வேட்டி சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். 

    விழாவில் காட்டுப்புத்தூர் நகர செயலாளர் சுப்பிரமணியன் நத்தம் பழனி கிளைச் செயலாளர் குமார் நத்தம் கிளை செயலாளர் சங்கர் தொட்டியம்  நகர இளைஞரணி செயலாளர் பிரகாஷ் காடுவெட்டி ஊராட்சி துணைத் தலைவர் திருமேனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    No comments