தொட்டியம் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம்
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தொட்டியம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு அனலாடீஸ்வரர் திருக்கோவிலில் திருத்தேரோட்டம் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் வடம் பிடித்து துவக்கி வைத்தார்.
தொட்டியம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அனலாண்டீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த மே மாதம் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தினந்தோறும் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றது காலை மற்றும் மாலையில் பல்வேறு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதிவுலா நடைபெற்று வந்தது. தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற்று வந்த இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கைலாய வாத்தியங்கள் முழங்க நடைபெற்றது. இதில் திருத்தேரின் வடத்தினை ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக சுற்றி வந்து கோவில் முன்பு திருத்தேரை நிலைக்குக் கொண்டு வந்தனர். முன்னதாக சிவனடியார்கள் தேருக்கு முன்பு கும்மியடி கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
இந்த வைகாசி விசாக பெரும் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், தொட்டியம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு அனலாடீஸ்வரர் திருக்கோவில் ஊழியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். திருவிழாவை காண தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர். பின்பு கலந்து கொண்ட அனைத்து பக்தர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments