• Breaking News

    தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையினர் கும்மிடிப்பூண்டி, ஏளாவூர்,ஆரம்பாக்கம், பகுதியில் அதிரடி சோதனை..... ஒன்றரை டன் மாம்பழம் அழிப்பு


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கும்மிடிப்பூண்டி, ஏளாவூர், ஆரம்பாக்கம் ,ஆகிய பகுதிகளில்  திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெகதீஷ்சந்திரபோஸ் உத்தரவு பேரில் அதிரடி சோதனை ஈடுபட்டனர். ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழத்தை பறிமுதல் செய்து அழிக்க உத்தரவிட்டார் இதை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டம் உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர்    கும்மிடிப்பூண்டி பகுதியில் கடைகளில் சோதனை ஈடுபட்டனர் தமிழக அரசால்  தடை செய்யப்பட்ட குட்கா  பறிமுதல் செய்து கடைக்காரருக்கு அபராதம் விதித்தனர்.

      ஆரம்பாக்கம் பகுதியில் சோதனையிட்டதில் மாம்பழத்தை பழுக்க வைக்க ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த 1.5 டன் மாம்பழத்தை காவல்துறையுடன் பறிமுதல் செய்து ஆரம்பாக்கம் குப்பைகொட்டு பகுதியில் பள்ளம் தோன்றி  புதைத்து அழித்தனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறுகையில் விவசாயிகள் பாதுகாக்கப்பட்ட மாம்பழத்தை மக்களுக்கு தரவேண்டும் தவறான முறையில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்து கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    No comments