கள்ளக்காதல் மோகம்..... மனைவியை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொட்ட பள்ளப்புறா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த வீணா (19) என்ற பெண் கடந்த மாதம் 22ஆம் தேதி காணாமல் போன நிலையில் அவருடைய சடலம் எரிந்த நிலையில் வனப்பகுதிக்குள் கிடைத்துள்ளது. அதாவது வீணாவை காணவில்லை என அவருடைய கணவர் ரவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த நிலையில் வீணா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரவி மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரவியிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.அதாவது பக்கத்து வீட்டு பெண்ணுடன் ரவிக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதை வீணா கண்டித்துள்ளதால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரவி தன் மனைவியை வேலை முடிந்தவுடன் அழைத்து செல்வதற்காக சென்றபோது ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் வைத்து அவரை கொடூரமான முறையில் அடித்துக் கொன்றுள்ளார்.
அதன்பிறகு பெட்ரோல் ஊற்றி உடலை எரித்துவிட்டு எதுவும் நடக்காதது போல் வீட்டிற்கு வந்ததோடு தன் மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நாடகம் ஆடியதும் தெரியவந்துள்ளது. மேலும் இதனையடுத்து காவல்துறையினர் ரவியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments