பஞ்செட்டியில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளமுருகன் ஆய்வு செய்தார்
கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளி,கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இந்நிலையில், அதற்கான ஆயத்த பணிகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதில்,ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம்,செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளிகளில் இயங்கும் பஸ்,வேன் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்யும் நிகழ்ச்சி சோழவரம் ஒன்றியம்,பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு இக்கல்லூரி வளாகத்தில் டிரைவர்களுக்கான கண் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மேலும், வாகன பயணத்தின்போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி? தடுக்க வேண்டும் என்ற தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், செங்குன்றம் மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 420 தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் தலைமை தாங்கினார்.இதில், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி கிரியா சக்தி கலந்து பள்ளி வாகனங்களில் முதலுதவி சிகிச்சை பொருட்கள் உள்ளனவா?, கண்காணிப்பு கேமராக்கள் சரியாக உள்ளதா?, அவசர வழி கதவுகள் சரியாக இயங்குகிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது கண்காணிப்பு கேமரா இயங்காத வாகனங்களுக்கும்,முதலுதவி சிகிச்சை பொருட்கள் மற்றும் பெட்டி இல்லாத வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.புண்ணியகோட்டி,கும்மிடிப்பூண்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருப்பையா,கும்மிடிப்பூண்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஸ்வரி, பொன்னேரி தீயணைப்பு நிலைய அதிகாரி சம்பத் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள்,அலுவலர்கள், கல்வித்துறை அதிகாரிகள், தீயணைப்பு நிலைய வீரர்கள், தனியார் பள்ளி வாகனத்தின் டிரைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில், செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைச் சேர்ந்த அசோக் நன்றி கூறினார்
பொன்னேரி செய்தியாளர் எம் சுந்தர்
No comments