போற போக்குல ஒரு சேதி..... மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக்.....
மனிதனின் விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ஆண்களுக்கு ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து UMN செவிலியர் கல்லூரியின் பேராசிரியரான சியாங்ஜோன் ஜான் யூ தலைமையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
மனித விரைகளில் நாய் விரைகளில் காணப்படும் பிளாஸ்டிக் செறிவு கிட்டத்தட்ட மூன்று மடங்கு உள்ளது: ஒரு கிராம் திசுக்களுக்கு 330 மைக்ரோகிராம்கள் மற்றும் 123 மைக்ரோகிராம்கள். மேலும் 47 நாய்கள் மற்றும் 23 மனித விந்தணுக்களில் 12 வகையான மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
No comments