• Breaking News

    முசிறியில் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் மறைந்த ஜெ.குரு நினைவு தினம் அனுசரிப்பு


    முசிறி கைகாட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வன்னியர் சங்க முன்னாள் தலைவர் ஜெ குருவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கைகாட்டியில் அமைக்கப்பட்டுள்ள அவருடைய திரு உருவப்படத்திற்கு  மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மு கருணாநிதி தலைமை தாங்கினார் .மாவட்ட துணைச் செயலாளர் ஆ மணிகண்டன் மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் தனுஷ் குமார் நகரச் செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .இதில் மாவட்டத் துணைத் தலைவர் பழனியப்பன் ,மாவட்ட இளைஞர் சங்கர் செயலாளர் கலைச்செல்வன், முசிறி ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், தொட்டியம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, தொட்டியம் நகரச் செயலாளர் கேசவன் உட்பட  தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜே குருவின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    No comments