சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் வளர்பிறை சோமவார பிரதோஷம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் வளர்பிறை சோமவார பிரதோஷதை முன்னிட்டு பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு வீற்றிருக்கும் நந்தியம்பெருமானுக்கு பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் மகா தீபாரதணையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் கிருஷ்ணகுமார்
No comments