• Breaking News

    8 வருட காதல்.... திருமணமான சில மணி நேரத்தில் ஓட்டம் பிடித்த காதலன்.....

     

    உளுந்தூர்பேட்டை அருகே சிறுத்தனூர் என்ற கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருடைய மகள் ரோஸ்லின் மேரி. 25 வயதாகும் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆக பணியாற்றி வருகிறார். அதே ஊரை சேர்ந்த ராஜ் மகன் தமிழரசன் (28) சென்னையில் தனியார் வங்கியில் பணியாற்றுகின்றார்.இவர்கள் இருவரும் எட்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் கேட்டுள்ளார். 

    ஆனால் காதலன் மறுப்பு தெரிவித்த நிலையில் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.போலீசார் இருவரது குடும்பத்தினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இளைஞர் மறுப்பு தெரிவித்ததால் அவரை கைது செய்வதாக போலீசார் எச்சரித்தனர். பெண்ணின் வீட்டார் வற்புறுத்தலால் ரோஸ்லின் மேரியை திருமணம் செய்து கொண்ட தமிழரசன், சில மணி நேரங்களிலேயே ஓட்டம் பிடித்தார். இதனால் அந்த இளம் பெண் மீண்டும் காவல் நிலையத்தை அணுகிய நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    No comments