• Breaking News

    தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 3 புதிய உத்தரவு

     

    தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மாணவர்கள் கைகளில் வண்ண கயிறுகள் அணிய தடை உள்ளிட்ட மூன்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கோடை வெயில் தணிந்து தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வருகின்ற ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி வெளியாக உள்ள நிலையில் ஜூன் 6 அல்லது ஜூன் 11ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

    No comments