மேஷம் ராசிபலன்
உங்கள் மந்தமான நாட்களை ஒதுக்கி வைத்து விட்டு, ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்வதில் கவனம் செலுத்துங்கள். உண்மையில் நீங்கள் சில பாராட்டுகளுக்காக ஏங்கலாம். மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை விட சுய மதிப்பீடு மிகவும் முக்கியமானது. உங்கள் கலை திறமைகளை இன்று வெளிப்படுத்துங்கள். இது சக ஊழியர்களிடம், உங்களைத் தனியாகக் காட்டி விடும். உங்கள் கவனங்கள் அனைத்தையும் தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் நண்பர்களால் உங்களுக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படும் என்றாலும், அவர்களைக் கண்மூடித்தனமாக நம்புவது நல்ல நடவடிக்கை அல்ல.
ரிஷபம் ராசிபலன்
உங்கள் கவலையற்ற அணுகுமுறை உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை இழக்கச் செய்து விடலாம். நீங்கள் கூட்டத்தில் தனித்து இருக்க விரும்பினால், நீங்கள் மெதுவாகச் செயல்படுவது நல்லதல்ல. உங்கள் வாழ்வை எளிதாக வாழ, மற்றவர்கள் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள். உண்மையில் உங்கள் உடலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல உணவு தேர்வு செய்ய, நீங்கள் காலையில் சீக்கிரமே எழுந்து, சாப்பிடத் தேவையான சரியான உணவைத் தேர்வு செய்யுங்கள்.
மிதுனம் ராசிபலன்
உங்களது தனிப்பட்ட வளர்ச்சிக்கான மற்றொரு வாய்ப்பை ஏற்படுத்தும் உங்கள் தெரிவானது, உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்துள்ளது. அதை மிதமாகக் கொள்ளுங்கள் மாறாக, அதன் கடைநிலைக்கு மேலே செல்ல வேண்டாம். சிறிய, நம்பகமான முன்னேற்றங்கள், ஒவ்வொன்றும் ஒரு முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்கான மிகச் சிறந்த அணுகுமுறையாகும். உங்களது பயிற்சி, பணி அல்லது வாழ்க்கையின் குறிக்கோள்களில் கூட, சில அதிர்ஷ்டமான விஷயங்கள் உங்களை நாடி வரப்போகின்றன.
கடகம் ராசிபலன்
எல்லாவற்றையும் சரிசெய்ய முயற்சிக்காதீர்கள். உங்களால் எளிதில் தீர்க்க முடியாத சில விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். இன்று, ஆரோக்கியம் என்பது உங்களது முக்கியமான கருதுகோளாக இருக்கிறது. சரியாகச் சொல்லப் போனால், அது சில காலமாகவே இருந்தது. ஆனாலும், நீங்கள் அதற்கு போதுமான கவனம் செலுத்த ஒருபோதும் அக்கறை காட்டவில்லை. இன்னும் காலம் இருக்கிறது. இந்த பிரச்சினையினை உங்களது உடலின் ஒரு தவிர்க்க முடியாத வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளுங்கள்.
சிம்மம் ராசிபலன்
இந்த நேரத்தில் நீங்கள் மந்தமாக உணர்கிறீர்களா? நீங்கள் இரவு முழுவதும் செலவழித்து அந்த எண்ணங்களால் துயரப்பட்டிருப்பது தெரிகிறது. காதல் என்பது எங்கும் உள்ளது. ஆனால், அதற்காக நீங்கள் அவசரப்பட வேண்டாம். நீங்கள் கோபமானவர் என்று உங்கள் கூட்டாளியை உணர வைக்காதீர்கள். உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுடன்சகஜமாகப்பழகுங்கள். சில தாமதமான வாழ்த்துக்கள், அந்த விலைமதிப்பற்ற கவனம் தேவைப்படும் எவருக்கும், மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் உண்டாக்கும். விட்டுக்கொடுப்பது அவர்களை மகிழ்விக்கும்!
கன்னி ராசிபலன்
நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க விரைந்து எடுப்பதைத் தவிருங்கள். நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு, உங்களுக்கு முக்கியம் என்று கருத்தும் விஷயங்களைப் பற்றிப் படியுங்கள். உங்கள் வழியில் நிறைய நல்ல விஷயங்கள் வர உள்ளது. நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். உங்கள் புத்திசாலித்தனமும், உண்மைத் தன்மையும் நிச்சயமாக உங்களுக்குப் பெரிய நண்பர்கள் வட்டத்தைப் பெற்றுக் கொடுக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். ஓய்வெடுக்க நேரம் எடுத்து உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
துலாம் ராசிபலன்
ஒரே இரவில் உங்கள் நம்பிக்கையை வளர்த்து விட முடியாது. மனதுடன் தொடர்பு கொள்ள நீங்கள் நிறைய நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு கடினமான நேரத்தைக் கடந்து வந்துள்ளீர்கள், கடந்த சில நாட்களாக உங்கள் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. உங்கள் உடலை நன்கு கவனித்துக் கொள்வதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய நேரம் இது. உங்கள் சிறந்த நண்பர் இன்று மந்த தன்மையுடன் இருக்கிறார், அவருக்கு உங்களது ஆதரவு தேவைப்படும். நீங்கள் அவருடன் இருப்பதுடன், அவர்கள் சிறந்து விளங்க அவர்களுக்கு உதவுங்கள்.
விருச்சிகம் ராசிபலன்
மனஅழுத்தமானது உங்களது உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. உங்களுக்கு ஏற்பட்டுள்ள செரிமான பிரச்சினைகள் மோசமான உணவுப் பழக்கத்தினால் எற்பட்டதல்ல. மாறாக, உங்களது மன அழுத்ததினால் ஏற்பட்டதாகும். உங்களுக்கு ஒரு கடினமான நேரத்தை அளிக்க விரும்பும் ஒரு சில நபர்கள் உள்ளனர். நீங்கள் கோவப்படுவதாக உணரும் போது, சிறிது நேரத்திற்கு அந்த இடத்தை விட்டு அகன்று, உங்கள் சொந்த நலனுக்காக வேறு ஏதாவது ஒன்றை நினைத்துப் பாருங்கள். நிறைய விஷயங்கள் உங்கள் மனதை ஆக்கிரமித்துள்ளன. உங்களது வாழ்க்கையிலிருந்து எதிர்மறை விஷயைங்களை புறந்தள்ளுங்கள். நல்ல விஷயங்கள் உங்கள் வழியில் வந்து கொண்டிருகின்றன.
தனுசு ராசிபலன்
கடின உழைப்பு மிகுந்த பலனளிக்கும். எந்த நேரத்திலும் அதன் முடிவுகளை நீங்கள் காண்பீர்கள். உங்களை நீங்களே நிதானமாகப் மாற்றிக் கொள்ள சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதை நீங்கள் வரமாகவே பெற்றுள்ளீர்கள்! உங்களுக்குரிய பயணம் மற்றும் வணிகத்திற்கான வாய்ப்புகள் விரைவில் அமையும். அதைச் செயல்படுத்த, சிறந்த முடிவுகளை எடுங்கள். உங்கள் மனதின் எண்ணங்கள் உங்களை ஆதிக்கம் செலுத்த விடவேண்டாம். தேவைப்பட்டால், நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.
மகரம் ராசிபலன்
உங்கள் வாழ்க்கையிலும், உங்களுக்கு நெருக்கமானவர்களின் வாழ்க்கையிலும் நீங்கள் நிறையத் தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள். நீங்கள் நேர்மறையான மற்றும் மேம்பட்ட விஷயங்களைச் செய்ய வேண்டும் என முடிவு செய்யுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த நாளில் நீங்கள் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உணர்கிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் சிறந்த நட்புறவில் இருப்பீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள், உங்களுக்குச் சாதகமாகவே செயல்படுகின்றன. இந்த நாளில் பல விஷயங்கள் நீங்கள் நினைத்தபடி நடக்கும். மீண்டும் உங்கள் யோசனைகளைப் பெறுவதற்கும், படைப்பாற்றலைத் தூண்டுவதற்கும், பழைய கூட்டணிகளை புதுப்பியுங்கள்.
கும்பம் ராசிபலன்
உங்கள் மனதுக்கும், உடலுக்கும் பிரத்தியேக கவனம் தேவை. ஆனாலும், உங்கள் நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் உங்கள் பாக்கெட்டை காலி செய்யும் செலவுகளைச் செய்வதில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உங்களை நேசிப்பவர்கள் இன்று உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள். மேலும், அவர்கள் உங்களை நேசிப்பதையும், அவர்கள் உங்களைப் பாராட்டுவதையும் நீங்கள் உணருவீர்கள். உங்கள் திறமையை அதிகரித்துக் கொள்ளக் கூடிய புத்தகங்களைப் படியுங்கள். ஏனென்றால் உங்களுக்கு மிக விரைவில் உயர் பதவி கிடைக்கலாம். உங்கள் மீது அக்கறை கொண்டு நீங்கள் வாழ்வில் முன்னேற வாழ்த்தும் நபர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். செய்ந்நன்றி மறத்தல் கூடாது.
மீனம் ராசிபலன்
இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் நாளாக இருக்கும். உங்கள் வாழ்வில் சிலகவனச்சிதறல்கள்வருகின்றன. உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். காதல் உங்களை மிகவும் அசாதாரண இடத்தில் இருப்பதைப் போன்று உணரச் செய்யும். உங்களது இலக்குகளைப் பற்றிஉங்களுக்குச்சந்தேகம் இருந்தாலும், உங்கள் கவலைகள் உங்களுக்கான நல்லவிஷயங்களைப்பாழாகி விடாதீர்கள். இன்று உங்கள் நண்பருக்கு உதவ வேண்டும். நீங்கள் ஒருவரே அவர்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கலாம்.













0 Comments