காதல் கணவர், 3 குழந்தைகளை விட்டுவிட்டு நகை, பணத்துடன் பெண் மாயம்....
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே காதல் கணவர் மற்றும் 3 குழந்தைகளை விட்டுவிட்டு, 18 லட்ச ருபாய் பணம், 15 சவரன் தங்க நகையுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
மேக்காமண்டபத்தைச் சேர்ந்த தம்பதி விபின் - நிஷா. இவர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், விபின் கடன் சுமையால் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதனால், வீட்டை விற்று ரூ.18 லட்சம் திரட்டிய விபின், அதனை மனைவியிடம் கொடுத்து விட்டு சென்னைக்கு பணிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், வெளியில் செல்வதாக கூறி ரூ.18 லட்சம் பணம் மற்றும் 15 சவரன் தங்க நகையுடன் சென்ற நிஷா, மாயமானார்.
இதையடுத்து அவரது கணவர் விபின் போலீசில் புகாரளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நிஷாவை தேடி வருகின்றனர்.
No comments