• Breaking News

    தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் வெளியீடு..... வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

     

    +2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் அனைவருக்கும் உபயோகிப்பாளர் உரிமை வார இதழ் சார்பாகவும், டீம் டிரான்ஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சார்பாகவும், மக்கள் நேரம் இணையதள செய்தி நிறுவனம் சார்பாகவும் வாழ்த்துக்கள். தோல்வியடைந்த மாணவ,மாணவிகள் மனம் தளராமல் அடுத்தமுறை சிறப்பாக தேர்வு எழுதி வெற்றி பெறவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


    தமிழ்நாட்டில் இன்று வெளியிடப்பட்ட பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 91.32 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.மாணவர்கள், தனித்தேர்வர்களும் பதிவு செய்த செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. இதன்படி இந்த ஆண்டு தேர்வு எழுதிய 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு தனியார் என மொத்தமாக, 2478 பள்ளிகள் 100% தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 397 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 0.53 சதவீதம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.125 சிறைவாசிகள் தேர்வுகளை எழுதிய நிலையில் அதில் 115 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92 சதவீதமாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் 91.32% பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீதம், தனியார் பள்ளிகள் 96.7 சதவீதம், மகளிர் பள்ளிகள் 96.39 சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 86.96 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 94.7 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    No comments