நேரு ஸ்டேடியத்தில் இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 28 வருடங்களுக்கு முன்பாக வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. தற்போது 28 வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி நாளை மாலை 6:00 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. மேலும் இந்த புதிய அறிவிப்பு கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments