கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கத்தில் சின்ன சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேகம்
கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கத்தில் சின்ன சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேகம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம், கார்த்திக் நகர், 2-வது பிரிவு, அபிநயா அவென்யூ பகுதியில் உள்ள சின்ன சமயபுரம், அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் திருக்கோயில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை விழா இன்று காலை நடைபெற்றது.
இதில் விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், புண்யாஹவாஜனம், ஆவாஹனம், பூஜை, நாடி சந்தனம், மஹா ஹோமம், மஹா பூர்ணாஹூதி, மஹா அபிஷேகம், மஹா கலசாபிஷேகம், அலங்காரம், குருபூஜை, மஹா தீபாரதனை மற்றும் பிரசாத விநியோகம் ஆகியவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சாமி தரிசனம் பெற்றனர். இதில் கோயில் நிர்வாகிகள் பிரகாஷ், கஜலட்சுமி, வார்டு கவுன்சிலர் விமலாஏழுமலை உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments