• Breaking News

    கும்மிடிப்பூண்டியில் தபால் துறைக்கு சொந்தமான சுமார் ரூ.2.50 கோடி மதிப்பிலான இடத்தை வருவாய்த்துறையினர் மீட்பு


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த தபால் துறைக்கு சொந்தமான சுமார் 2 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1090 சதுர அடி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சுவர் எழுப்பி  வைத்திருந்த நிலையில் தபால் துறைக்கு சொந்தமான இடத்தை மீட்டு வழங்குமாறு தபால் துறையினர் ‌அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர்  ப்ரீத்தி முன்னிலையில் காவல் துறையினர் பாதுகாப்புடன் தபால் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்.

    வட்டாட்சியர் ஆக்கிரமிப்பை அகற்ற‌வந்த‌ போது அப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து அகற்ற வந்தவர்கள் சிறிது நேரம்  அதனை ‌இடிக்க முன் வராததால் வட்டாட்சியர் ஆக்கிரமிப்பை அகற்ற தடையாக உள்ளவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்திய தை தொடர்ந்து பின்னர் அவர்கள் கலந்து சென்றதும் ஆக்கிரமிப்பானது அகற்றப்பட்டது.பின்னர் அங்கு அஞ்சல் துறைக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை வைக்கப்பட்டது.

    கும்மிடிப்பூண்டி நிருபர். எம். சுந்தர்

    No comments