இன்றைய ராசிபலன் 23-05-2024
மேஷம் ராசிபலன்
உங்களை யாரோ பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் சிந்தனையற்ற செயல்கள் இன்று வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன. வெளிப்படையான, பாதுகாப்பான விஷயங்கள் இப்போது உங்களுக்குத் தெரியும். சுத்தமானகாற்றைச்சுவாசியுங்கள். மேலும், சுத்தமாக வாழுங்கள். நிச்சயமாக அது எளிதாக இருக்காது. ஆனால், இறுதியில் இது உங்களுக்கு சில நல்ல பெயரையும், நல்லெண்ணத்தையும் கொடுக்கும். வாழ்க்கையில் நீங்கள் எடுத்த முயற்சிகளுக்காக ஒருபோதும் வருத்தப்பட வேண்டாம்.
ரிஷபம் ராசிபலன்
இன்றைய நாளில் நீங்கள் எதிர்பார்த்த பணிவு கிடைக்கும். ஒருவரின் தவற்றைச் சுட்டிக்காட்ட நீங்கள் ஆசைப்படலாம். அவ்வாறு செய்வது உங்களுக்குக் கஷ்டத்தை உண்டாக்கலாம். அதற்குப் பதிலாக அவர்களுடன் தனிப்பட்ட முறையிலும் அமைதியான முறையிலும் செயல்பட முயற்சி செய்யவும். உங்கள் செயல்களுக்கு நீங்களே பொறுப்பாக இருங்கள். உங்கள் உள்ளுணர்வு மிகவும் வலுவாக இருக்கிறது. எனவே அதை உங்கள் நன்மைக்காகப் பயன்படுத்துங்கள். தொடர்ந்து சிந்தனையுடன் இருங்கள். இது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உங்களுக்குப் பயனளிக்கும்.
மிதுனம் ராசிபலன்
சமீபத்தில் ஏதேனும் சிந்தனைகள் உங்கள் மனதில் காலதாமதமாக தோன்றுகிறதா? புதிதாக ஏதாவது ஒன்றை புதியதாக செய்ய வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு மேலோங்குகிறதா? இப்போது இதைத் தொடங்க சிறந்த நேரமாக இருக்கும். மேலும், அவைகள் சரியான நிலையில் கனகச்சிதமாக பொருந்துவதாகத் தோன்றும். புதிய தொடர்புகள் அமைய வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் உங்களிடம் தான் உள்ளது. பிரபஞ்சத்தால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும்.
கடகம் ராசிபலன்
சமீபத்திய நாட்களில் சோம்பல் உங்களை ஆட்கொண்டுள்ளது, இது உங்கள் இறுதி செயல்திறனை பாதித்து விடும். வேலைகளை தள்ளிப்போடுவதை நிறுத்துங்கள். அற்புதமான வாய்ப்புகள் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. உங்கள் மனதுக்கு உண்மையாக உண்மையாக இருப்பதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம், அது நீண்ட நாட்கள் நீடிக்காது. பணியில் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதுடன், குழுவில் உள்ளவர்களுடன் பேசி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்.
சிம்மம் ராசிபலன்
இன்று, வாழ்நாள் முழுவதும் நீங்கள் நன்றாக விரும்பும் என கருதும் நபர்களோடு அணிசேருங்கள். இது உங்கள் புதிய முயற்சிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லது உங்கள் வாழ்க்கை வேறு பாதையை நோக்கி பயணிக்க உதவும். தனிநபர்கள் மற்றும் அவர் சார்ந்த சூழ்நிலைகளில் உள்ள நேர்மறையான குணங்களைக் தெரிந்து கொள்ள உங்கள் மனதைத் திறந்திடுங்கள். மற்றவர் மீது பழிபோடுவதைத் தவிர்த்து, உங்களுக்கு அவசியமில்லா நபர்களிடம் கூட, கரிசனையோடு இருங்கள். இலட்சியத்தோடு பணியினைச் செய்வதற்கு, உங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்து புனரமைப்பு செய்யுங்கள்.
கன்னி ராசிபலன்
உங்கள் கடின உழைப்பு மற்றவர்களுக்கும்தெரியத்தொடங்கியுள்ளது. இது கண்டிப்பாக நல்லபலனைக்கொடுக்கும். வாழ்க்கை நீங்கள் நினைத்ததைவிடச்சிறந்தது என்று நீங்கள் உணர்கிறீர்கள். நீங்களே மிகவும் கடினமாக நபராக இருக்காதீர்கள். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். பல விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுகின்றன. இன்று, நீங்கள் சிறந்த புத்திசாலி போன்று செயல்படுவீர்கள். அதைஉங்களுக்குச்சாதகமாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு விருந்து தயாராக உள்ளது, எனவே அதற்குச் செல்லுங்கள்.
துலாம் ராசிபலன்
எவர் ஒருவர் உங்களது ஆலோசனைகளையும், உதவியையும் எதிர் நோக்குகிறாரோ, அவருடன் கரம்கோர்த்து உதவுங்கள். இன்று உங்களது அன்பை அவர்களுக்கு கொஞ்சம் காட்டுங்கள். ஓய்வெடுக்கவும், ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நேரத்தை உபயோகித்துக் கொள்ளுங்கள். நீங்கள் திட்டங்களை சிறந்த முறையில் உருவாக்க ஒரு அசாத்தியமான தேவை உள்ளது. ஒரு நாள் மட்டும் அதற்காக ஒதுக்கி வையுங்கள். உங்களது தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளையும், அது சார்ந்த தொழில் நுட்பங்களையும் விட்டுவிட்டு, அமைதியிலும், தியானத்திலும் லயித்து இருப்பதன் மூலம், அழகை அனுபவியுங்கள். சாதாரணமாக இருங்கள். மேலும், உங்களைச் சுற்றிலும் அமைதியைக் காணுங்கள்.
விருச்சிகம் ராசிபலன்
உங்கள் வாழ்க்கையில், இந்த பணியைத் தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு என்று நீங்கள் உணரலாம். இது உங்களுக்கு மன அழுத்தத்தை மட்டுமே ஏற்படுத்தும். இதற்காகக் கவலை கொள்ள வேண்டாம். இந்த நிலை விரைவில் மாறும். நிகழ்காலத்திலிருந்து தப்பிக்க நீங்கள் முயல்கிறீர்கள், இது நீண்ட நாட்களுக்கு உதவாது. யதார்த்தத்தைத் தைரியமாக ஏற்றுக் கொள்ளத் தயாராக வேண்டும். உங்கள் வாழ்க்கையில் சில புதிய விஷயங்களை முயற்சியுங்கள். இந்த முயற்சிகளைச் சோதிக்க இது ஒரு நல்ல நாளாக உங்களுக்கு அமையும். இந்த முயற்சிகளின் பலனைப் பற்றி கவலை கொள்ள வேண்டும், தொடர்ந்து பணியைச் செய்து கொண்டே இருங்கள்.
தனுசு ராசிபலன்
வாழ்க்கையில் பிரச்சினைகள் முடிவற்றவை. எனவே, அவற்றை ஒவ்வொன்றாக ஒவ்வொரு சமயத்தில் கையாளுங்கள். இவற்றில், உங்கள் செயல்பாடுதான் முதன்மையானது. எனவே, பதற்றம் இல்லாமல் இயல்பாகவே இருங்கள். ‘பிரச்சினைகள் என்னும் சூழலில்’ நீங்கள் மட்டுமே சிக்கிக்கொண்டுள்ளீர்கள் என்று எண்ண வேண்டாம். மாறாக, எல்லோருமே அதில் ஏதாவது ஒருவிதத்தில் சிக்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் அதை புறக்கணிக்கிறார்கள். சிலர் அதை எதிர்கொள்கிறார்கள். நீங்கள் ஒரு ‘பிரச்சினையினை தீர்த்தவுடன், இன்னொன்று உங்கள் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது. உங்களிடமுள்ள ‘பிரச்சினைகளை தீர்க்கும் போது, விவேகமான அணுகுமுறையைப் பயன்படுத்துங்கள். அது உங்களுக்கு நன்மையினைப் பெற்றுத் தரும். கவலையற்ற அணுகுமுறையும், எதிர்காலத்தைப் பற்றி பயப்படாமல் நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக கழிக்கும் நிலையும், இப்போது உதவாது. எனவே கவனமாக இருங்கள்.
மகரம் ராசிபலன்
சமீபத்தில் நிறுவனத்தில் பணியாற்றும் சிலரை நீங்கள் தவிர்த்து இருக்கலாம். இப்போது உங்கள் மனம் அதே சிந்தனையில் ஆழ்ந்துள்ளது. நீங்கள் சற்று தூரம் சென்றிருக்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இது உங்கள் உள்ளுணர்வுகளில் தோன்றினால், நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். இந்த நினைவு உங்கள் தலையில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும், இடைவிடாத கவலையின் காரணமாக உங்கள் மன அழுத்தம் அதிகரித்துள்ளன. எனவே, இன்று நீங்கள் கொஞ்சம் மன அமைதியைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம் ராசிபலன்
சமீபத்தில், அனைத்துவிதமான மன அழுத்தங்களும், பதட்டமும் சேர்ந்து உங்கள் உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. நீங்கள் ஒவ்வாமை அல்லது நாட்பட்ட நோயினை எதிர்த்துப் போராடுபவராக இருந்தால், வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய முடிவுசெய்ய இது சரியான தருணமாகும். நேர்மறையானவற்றை சொல்வதற்கு இயலாத நபர்களிடமிருந்து விலகியே இருங்கள். உங்களைச் சுற்றிலுமுள்ள நபர்கள் உங்களது மனதிற்கு எதிர்மறையானவற்றையே அளித்துள்ளனர். இன்று, ஆகச்சிறந்த முடிவுகளை எடுக்கும் முன்பு, உங்கள் உள்ளுணர்வுகளை முன்பை விட தற்போது அதிகம் நம்ப வேண்டும்.
மீனம் ராசிபலன்
உடல்நலம் குறித்த பிரச்சினைகள் உங்களை பலவீனப்படுத்திவிடுகிறது. உங்கள் உடல்நிலை குறித்து நிபுணரது கருத்தைப் பெற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இன்று, விஷயங்கள் கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக இருக்கின்றன. உங்களுக்கே ஆச்சரியம் அளிக்கும் விதத்தில், விஷயங்கள் கச்சிதமாக பொருந்தக்கூடியதாகத் தோன்றும். உங்களது அன்பிற்கினிய பழைய நண்பருடன் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது, உங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சில அற்பத்தனமான செயல்களால் உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நபர்கள் இருக்கலாம். அவர்களை விலக்கி வைத்து, எல்லா சிக்கல்களிலிருந்தும் விடுபட நீங்கள் விரும்பக்கூடும்
No comments