இன்றைய ராசிபலன் 22-05-2024

மேஷம் ராசிபலன்
வாழ்க்கையில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களைக் கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கினால், நீங்கள் கண்டிப்பாக இதயம் நொறுங்கிப் போகும் அளவுக்கு வலிகளைப் பெறுவீர்கள். பணம் மட்டுமே உங்கள் வாழ்க்கையின் இறுதி இலக்காக இருக்கும்போது, உங்கள் கவனத்தை ‘பணம் சம்பாதிப்பதில்’ இருந்து விலகி உங்கள் திறமைகளை அதிகரிக்கும் செயல்களில் கவனம் செலுத்தவும். இதுபோன்ற விஷயங்களை எப்போதும் உங்கள் உள் மனது எச்சரித்துக் கொண்டே இருக்காது, அதனால், அற்ப விஷயங்களை ஒதுக்கி வைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இது மட்டுமே வாழ்க்கையில் உங்களை மெதுவாகச் செல்ல வைக்கும்.

ரிஷபம் ராசிபலன்
உங்கள் வாழ்வில் முன்னேற்றம் தேவைப்படும் விஷயங்களை அடையாளம் கண்டு, அவற்றை அடைய பணியாற்றுங்கள். நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய விரும்புகிறீர்கள். இது நிச்சயமாக உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இன்று உங்கள் உடல்நலம் மற்றும் மன நலனில் கவனம் செலுத்துங்கள். யாரிடமும் உதவி கேட்க வெட்கப்பட வேண்டாம். புதிய விஷயங்களைத் தொடங்குங்கள். இதனால் கிடக்கும் முடிவுகளால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்களைப் பரப்பும் நபர்களிடம் இருந்து விலகி இருங்கள்.

மிதுனம் ராசிபலன்
ஒரு குழப்பமான சிந்தனை உங்களை முன்னேற விடாமல் செய்கிறது. அதை விரைவில் நெருங்க வேண்டும். இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு அந்த குழப்பத்தைக் களைந்து விடுங்கள், உங்கள் மன அழுத்தத்தை உங்களை ஆட்கொள்ள அனுமதித்தால், உங்களது புதிய முயற்சிகள் பாதிக்கப்படக்கூடும். எனவே தியானம் அல்லது பிடித்தமான வேலையைச் செய்து, அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருங்கள். நீங்கள் நம்பக்கூடிய தீர்வால், அவர்கள் வெளியேற்றக்கூடும் என்பதால், உங்கள் சிறந்த நண்பர்களிடம் திறந்த மனதுடன் நடந்து கொள்ளுங்கள்.

கடகம் ராசிபலன்
நீங்கள் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் போது, உங்கள்சமூகத்தைச்சேர்ந்தவர்களின் உதவிகளை நன்றாகப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு நீங்கள் அறிமுகமில்லாதவர்களின் நுண்ணறிவு மற்றும் அறிவுரை உங்களுக்கு உதவும். உங்கள் கடின உழைப்பும், விடாமுயற்சியும் விரைவில் நல்ல பலன் தரும். நீங்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். உங்கள்ஓய்வுக்காகவும், உங்களைப்பற்றிக்கவலைப்படவும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் சம்பாதிக்கிறீர்கள்! இதனால், உங்கள்உள்ளுணர்வுகளைச்சிறப்பாகப் பயன்படுத்தவும், உங்கள் அறிவு மற்றும் திறன்களை பல்வேறு கோணங்களில் விரிவுபடுத்திச்சிந்திக்கத்தொடங்குங்கள். இன்று, மன அழுத்தத்திற்கு விடை கொடுங்கள்.

சிம்மம் ராசிபலன்
இன்று, அமைதியினை நிலைநாட்டுவது தான் உங்கள் முன்னுரிமையாக முதலிடத்தில் உள்ளது. ஒரு சில புத்திசாலித்தனமான நபர்கள் உங்களை அவர்களது பக்கத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். இன்று, அவர்கள் உண்மையிலேயே உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவே விரும்புகிறார்கள். ஒருவேளை, அவர்கள் உங்களுக்கு சற்று எரிச்சலூட்டினால், நீங்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வார இறுதி நாட்களானது மகிழ்ச்சியாக பொழுதைக் களிக்கும் பிரதான நோக்கத்திற்காகவே உள்ளன. ஏதாவது செய்யுங்கள். கிடப்பிலுள்ள வேலைகளைச் சமாளிக்க சிறந்த செயல் திட்டத்துடன் வாருங்கள்.

கன்னி ராசிபலன்
கடந்த காலங்களில் நீங்கள் பிடிவாதமாக இருந்ததால், பல சிக்கலைச் சந்திக்க நேர்ந்தது. நீங்கள் குழப்பத்தில் இருப்பதை விரும்பவில்லை என்றால், எந்த வகையிலும் குழப்பத்தில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள். ஒருவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டிய பின்னர், அவருடன் மீண்டும் பேசுவதும் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அவரிடம் மன்னிப்பு கேட்பது உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது, மன்னிப்பு கேட்பதால், நீங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரியப் படுத்துங்கள். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வழிகாட்டிகள் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வெளிச்சம் காட்டும் விளக்காக இருப்பார்கள். தேவைப்பட்டால் அவர்களிடம் உதவி கேட்கப் பயப்பட வேண்டாம்.

துலாம் ராசிபலன்
நீங்கள் பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருங்கள், கடுமையான வார்த்தைகளைப் பேசுவது எந்தவொரு சூழ்நிலையையும் மோசமானதாக மாற்றி விடும். இதனால் உங்களுக்குத் தாங்கிக் கொள்ள முடியாத மன அழுத்தமும், கட்டுப்படுத்த முடியாத கோபமும் உண்டாக்கும். இந்த நாளில் சிறிய ஓய்வு எடுத்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும். இந்த ஓய்வு உங்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுப்பதுடன், உங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்யும். மிகுந்த கட்டுப்பாடு கொண்டவராக இருக்க வேண்டாம், உங்களிடம் உள்ள சில பொறுப்புகளை விட்டுவிட முடிவு செய்யுங்கள்.

விருச்சிகம் ராசிபலன்
நீங்கள், உங்கள் பணிகளைச் செய்யத் தொடங்குங்கள், இன்று உங்களால் செய்யக்கூடியதில் சிறந்ததைச் செய்ய விரும்புவீர்கள். உங்கள் தற்போதைய முயற்சிகளில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய சரியான நபர்களுடன் தொடர்பு கொள்ள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு ஒரு நன்மை நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், நீங்கள் செய்யும் செயல்கள் மனதளவில், உங்களை நன்றாக உணரச் செய்யும். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் உங்களுக்கு நம்பிக்கை குறைவாக இருக்கலாம், உங்கள் முதுகில் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க யாராவது ஒருவர் உங்களுக்குத் தேவைப்படலாம்.

தனுசு ராசிபலன்
குடும்பத்தினரும், அன்பான நண்பர்களும் இன்று உங்கள் நாளில் நடக்கும் விஷயங்களைப் பார்த்து வெறுமனே பரிதாபம் மட்டுமே படுவார்கள். படுக்கையிலிருந்து எழுந்து, புதிய காற்றைச் சுவாசிக்க வெளியே செல்லுங்கள். ஒரே இரவில் நீங்கள் நம்பிக்கையை வளர்க்க முடியாது. சரியான திசையில், சிறிய படிகள் வைத்து நம்பிக்கையை வளர்ப்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் சுய மதிப்பை யாரும் வரையறுக்க முடியாது என்பதை உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. எனவே, இனி யாராவது அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று நீங்கள் காத்திருக்க வேண்டாம்.

மகரம் ராசிபலன்
உங்கள் மனதில் குழப்பம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அது இன்று முடிவுக்கு வர வேண்டும். சந்தேகங்ளும், குழப்பங்களும் உண்மையான சந்தோசத்தின் எதிரியாகும். கோபப்படும் இயல்பு காரணமான நீங்கள் சில நண்பர்களை இழந்துவிட்டீர்கள். பருவகால ஒவ்வாமை உங்களை எளிதில் பாதிக்கும். உங்கள் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை, மேலும் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்கும் விஷயங்களில் மிகக் குறைவான கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

கும்பம் ராசிபலன்
மற்றவர்களைப் புண்படுத்தும் எண்ணங்கள் உங்களையே அழித்து விடலாம். எனவே, வரம்பை மீறிச் சென்று விட வேண்டாம். இந்த அனுபவங்கள் தான் உங்களைப் பலப்படுத்தியுள்ளன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்பு வைத்துக் கொள்ளுதல் என்பது இன்று ஒரு சவாலாக உள்ளது. உங்கள் சகாக்களுடன் நீங்கள் நன்றாகப் பழகுவதாகத் தெரியவில்லை. தவறான செய்திகளை வெளிப்படுத்தக்கூடிய உங்கள் உடல் மொழியைக் கண்காணியுங்கள்.

மீனம் ராசிபலன்
கடந்த காலத்தில் நடந்த வேதனையான விஷயங்களைப் பற்றி இன்று நீங்கள் சிந்திக்க வேண்டாம். இப்படிச் சிந்தித்தால், நீங்கள் மீண்டும் மனதிற்கு வலியை ஏற்படுத்தும் பாதையில் செல்ல விரும்ப மாட்டீர்கள். உங்களுக்கு உள்ள சிறந்த ஞாபக சக்தியே சில நேரங்களில் பிரச்சினையாக மாறி விடலாம். இதனால், உங்களுக்கு அநீதி இழைத்தவர்களை நீங்கள் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாது. அமைதியாக இருங்கள், இது உங்களுக்கு இப்போது அவசியம் தேவைப்படுகிறது. உங்கள் இலக்கை அடைய நீங்கள் வலிமை பெற்றவராக இருக்க வேண்டும். இன்று நீங்கள் எதிர்பாராத சிலர் உங்களுக்கு உதவி செய்ய முன் வருவதைக் காணலாம்.
No comments