ஐபிஎல் 2024 : தமிழக வீரர் கையில் தான் கோப்பை ....
ஐபிஎல் 2024 போட்டியில் பிளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட அணிகள் தேர்வாகியுள்ளன. பலரும் எதிர்பார்த்த சிஎஸ்கே அணி மே 18 அன்று நடைபெற்ற ஆர்சிபி vs CSK இடையேயான போட்டியில் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறியது.
தமிழக அணி சுற்றில் இருந்து வெளியேறினாலும் மேற்கண்ட நான்கு அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தமிழக வீரர் நடராஜன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தமிழக வீரர் அஸ்வின், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் என அனைத்து அணியிலும் ஒரு தமிழர் இடம் பெற்றுள்ளதால், மேற்கண்ட நான்கு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்றாலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தமிழனின் கையில் கோப்பை இருப்பது நிச்சயம் என நெட்டிசன்கள் இணையத்தில் இதுகுறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
No comments