கடலூர்: ஒரே நேரத்தில் 2 பேருந்துகள் விபத்து - 24 பேர் காயம்

 

புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற அரசு பஸ் ஒன்று இன்று அதிகாலையில் கடலூர் ரெட்டிசாவடி அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது பின்னால் வந்த ஆம்னி பஸ், அரசு பஸ் மீது மோதியது. இந்த ஆம்னி பஸ் சென்னையில் இருந்து வேளாங்கன்னி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 24 பயணிகள் லேசான காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் சுமார் 1 மணிநேரத்துக்கு அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments