பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி 15-ம் ஆண்டு ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது..... சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் டிவி அசார் கலந்துகொண்டார்......
பெருவாயல் டி ஜே எஸ். பொறியியல் கல்லூரியில் 15 ஆம் ஆண்டு விழா. மற்றும் விளையாட்டுப் போட்டிகள். கல்ச்சுரல் பெஸ்ட் 2கே 24. கல்லூரி வளரத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், கல்விக் குழுமத்தின் தலைவருமான கல்விநெறி காவலர் டி.ஜெ.கோவிந்தராசன் தலைமை தாங்கினார். கல்விக்குழுமத்தின் மேலாண்மை இயக்குனரும், செயலாளருமான டி.ஜெ.ஆறுமுகம்,துணைத் தலைவர் டி.ஜே.தேசமுத்து,கல்விக் குழுமத்தின் இயக்குனர்கள் டாக்டர் பழனி,எ.விஜயகுமார், எ.கபிலன்,டி.தினேஷ்,டி.ஜெ.எஸ்.ஜி.தமிழரசன், உறுப்பினர்கள் எஸ்.சண்முகசுந்தரம்,ஆர்.ஜெயக்குமார்,ஏ.ராஜேஷ், கல்விக் குழுமத்தின் நிர்வாக அதிகாரி எஸ்.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில்,சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் டிவி அசார் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். மேலும்,கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு நிகழ்ச்சியில் தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.இதன் பின்னர்,பல குரல்களில் பேசி அனைவரையும் மகிழ்வித்தார். மேலும்,செல்போன் உபயோகம் என்பது மாணவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், சீரழிவுக்கு செல்போனை சிறிதளவும் பயன்படுத்தக் கூடாது என்பதை சிறப்பாக எடுத்துக் கூறினார்.இதில், மாணவர்களின் கண்ணைக் கவரும் கலை நிகழ்ச்சிகள், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
No comments